தூத்துக்குடி அருகே தீ விபத்தில் கர்ப்பிணி பலி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக தீ விபத்தில் பலியானார்.

தூத்துக்குடி, ராஜகோபால் நகரில் வசிப்பவர் கூலித் தொழிலாளி கண்ணன். இவரது மனைவி பத்ரகாளி (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பத்ரகாளி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்தார் பத்ரகாளி. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் பத்ரகாளி உடல் கருகி படுகாயம் அடைந்தார்.

அவரை தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆர்.டி.ஓ. குருதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+