ஜம்மு காஷ்மீரில் பெண் தீவிரவாதி கைது
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 27 வயது பெண் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீவிரவாத இயக்கங்களும் தங்களின் சதி திட்டங்களை அரங்கேற்ற பல்வேறு மாற்று வழிகளை சிந்தித்து வருகின்றன.
இந்த வகையில், போலீசாருக்கு துளியும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உளவு பார்க்கவும், முக்கிய பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் பெண்களை பயன்படுத்தும் யுத்தியை சமீபகாலமாக தீவிரவாதிகள் கையாண்டு வருகின்றனர்.
காஷ்மீரில் கடந்தாண்டு எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற அசியாமாலிக் என்ற பெண் ஐஎஸ்ஐ உளவாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் நாக்சேனி என்ற பகுதியில் போலீசார் கடந்த 4ம் தேதி சுற்றி வளைப்பு தாக்குதல் நடத்தினர்.
இதில் ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் பெரோஸ் அகமது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் மனைவி ஹபீசா பேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். 27 வயதான ஹபீசா பேகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரோஸ் அகமதுவை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இரண்டு குழந்தைகள் பெற்ற ஹபீசா பேகமும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, போலீசாருக்கு தெரியாமல் கொண்டு போய் சேர்ப்பது, ராணுவ நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேவு பார்த்து தீவிரவாதிகளுக்கு தெரிவிப்பது போன்ற வேலைகளில் நபீசா ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதங்களை இயக்கவும் ஹபீதா பேகம் பயிற்சி எடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். தேச வீரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் ஹபீசாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு மிகவும் அப்பாவித்தனமாக தோற்றமளிக்கும் ஹபிசாவை தீவிரவாதி என நம்புவதற்கு நீண்ட நேரம் பிடித்தது என போலீசார் தெரிவித்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications