அனுமதி பெறாமல் இயங்கிய ஸ்ரீபெரும்புதூர் பள்ளிக்கு சீல் வைப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த பள்ளிக்கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தினர்.

ஆனால் 2 பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் கேட்டு இதுவரை விண்ணப்பிக்காததால் அந்த பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.

காஞ்சீபுரம் அருகே திருப்புகுழியில் செயல்பட்ட தேவி மெட்ரிக் குலேஷன் பள்ளியை கடந்த மாதம் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதில் படித்த 200 மாணவ - மாணவிகளை இன்னொரு பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் செயல்பட்ட அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கீகாரம் வாங்காமல் வருடக்கணக்கில் பள்ளி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்த பள்ளிக்கூடத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத் தனர்.

சீல் வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு வரை 68 மாணவ- மாணவிகள் படித்து வந்தனர்.

இந்த பள்ளி அங்கீகாரம் பெறாத பள்ளி என சில பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் இந்த ஆண்டு நிறைய பேர் குழந்தைகளை இங்கு சேர்க்கவில்லை. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வெறும் 18 பேர்தான் படித்து வந்தனர்.

பள்ளி மூடப்பட்டதால் 18 பேரையும் பக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் மெட்ரிக் பள்ளியிலும் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மோகன்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 18 பள்ளிக்கூட நிர்வாகிகளும் தற்போது அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக பல்வேறு பள்ளிகளின் மீது புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அவற்றை கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதன்படி முதல் கட்டமாக ஒரகடம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியை பிப்ரவரி 8 முதல் மூடுவதற்கு காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்க்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+