ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்க முயன்ற மெக்கானிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற மெக்கானிக் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, பெரம்பூரில் உள்ள ஜவஹர் நகரில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் பணம் எடுப்பது போல நுழைந்துள்ளார்.

உள்ளே சென்றதும், கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் ஆகியற்றின் இணைப்புகளை துண்டித்து விட்டு, ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயற்சி செய்தார்.

அப்போது பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் வந்ததை பார்த்ததும், அங்கிருந்து அந்த வாலிபர் நழுவிவிட்டார்.

உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது, ஏடிஎம்மில் உள்ள ரூ.11 லட்சம் பணத்தை கொள்ளை அடுக்க முயற்சி நடந்தது தெரியவந்தது.

வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் தாமஸ் (28) என்ற வாலிபர் தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோபாலபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+