சென்னை வீடுகளை கலங்கடித்த மர்ம காலிப்பெட்டி பார்சல்!

Subscribe to Oneindia Tamil

Parcel
சென்னை: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட தனியார் கொரியர் நிறுவனத்தின் மூலம் ஒரே மாதிரியான மர்ம பார்சல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு கார்ட்போர்டுகளால் செய்யப்பட்ட காலிப் பெட்டிகளில் வெறும் பேப்பர்களை மட்டும் திணித்து பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட இந்த பார்சல்கள் 'சாம்பிள் டின்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளன.

அனுப்புனரின் பெயர் முகவரி போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடாமல் இந்த பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மும்பை அந்தேரியை தலைமையகமாகக் கொண்ட இந்த கொரியர் நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு அனுப்புனரின் விவரங்களை வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால், தனி ஏஜென்சி மூலம் இந்த பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதால், அனுப்புனரின் விவரங்கள் தங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டனர். கோபாலபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு வீடுகளுக்கு இதுபோன்ற ஒரே மாதிரியான பார்சல்கள் சென்றுள்ளன.

சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திடம் இதுதொடர்பான புகார் மட்டும் கடந்த ஓரிரு நாட்களில் 60 மேற்பட்டோரிடம் இருந்து வந்திருப்பதாக ஊழியர்கள் கூறினர்.

சில தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் அல்லது பரிசுத்திட்டத்தில் பங்கேற்றவர்கள் போன்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை பார்சல் மூலம் மொத்தமாக அனுப்புவது வழக்கம். அவ்வாறு வந்த பரிசு பார்சல்களை யாரேனும் களவாடி இதுபோன்று காலிப்பெட்டிகளை அனுப்பியிருக்கக் கூடும் என கொரியர் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+