விலைவாசி உயர்வு: மன்மோகன், சோனியா, சரத் பவாரே பொறுப்பு - பாஜக
புனே: விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோரே பொறுப்பு என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
புனேவில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த அவல நிலைக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு பொருளாதார நிபுணரே நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார். ஆனால் நமது நாடு இவ்வளவு பெரிய சிக்கலில் சிக்கித் தவிப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே தற்போதைய நிலைக்குக் காரணம்.
ஜனதாக் கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் இருந்தபோது பண வீக்கம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. விலைவாசியும் இந்த அளவுக்கு உயரவில்லை என்றார் கத்காரி.












Click it and Unblock the Notifications