பிப். 25ம் தேதி டெல்லியில் இந்தியா - பாக். வெளியுறவு செயலாளர்கள் பேச்சு
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் தேதி டெல்லியில் நடைபெறும் என பாகிஸ்தான் இன்று முறைப்படி அறிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் பாகிஸ்தான் எழுப்பும் எனவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷிக்கும் இடையே இன்று காலை ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையின்போது வருகிற 25ம் தேதி இரு நாட்டு வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டத்தினை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீருக்கு சமீபத்தில் மத்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் அழைப்பு விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications