காப்பகத்தில் மீட்கப்பட்ட குழந்தைகள் 14ம் தேதி அஸ்ஸாம் பயணம்
நெல்லை: களியக்காவிளை காப்பகத்தில் மீட்கப்பட்ட 76 குழந்தைகள் வரும் 14ம் தேதி ரயில் மூலம் அஸ்ஸாம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
குமரி மாவட்டம் களியக்கவிளை அருகே பாலவிளையில் மதபோதகர் ஷாஜி என்பவர் நடத்தி வந்த அனாதை இல்லத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்நத 76 குழந்தைகள் முறைகேடாக அடைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.
கடந்த மாதம் 23ம் தேதி இக்குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர். குழந்தைகள் நெல்லை சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து அஸ்ஸாம் மாநில சிபிசிஐடி போலீசார் நெல்லை வந்து விசாரணை நடத்தி குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டனர்.
ஆனால் சரணாலய ஊழியர்கள் குழந்தைகளை அஸ்ஸாம் மாநில போலீசாருடன் அனுப்ப மறுத்து விட்டனர்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தைகள் நலக்குழு மற்றும் தமிழக போலீஸ் உதவியுடன் அனுப்பி வைப்பதாக கூறினர்.
இதுகுறித்து அஸ்ஸாம் போலீசார் அம்மாநில அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அஸ்ஸாம் சமூக நலத்துறை அமைச்சர் சென்னை வந்து தமிழக சமூக நலத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து குழந்தைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 14ம் தேதி 76 குழந்தைகளும் நெல்லையில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications