ஏப்ரல் முதல் புதுச்சேரிக்கு விமான சேவை: மத்திய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: வரும் ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் விமான தள பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனால் அங்கு விரைவில் விமான சேவை தொடங்குவது குறித்து மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபு படேலுடன் பேசினோம்.

இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் 50 பயணிகள் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படும். இது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சு நடத்தி வருகின்றன.

முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து பெங்களூர், கொச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் சென்னைக்கும் விமானப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+