சிபிஐ அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது - நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

Nallakannu
நெல்லை: நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி்ன் கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு கூறினார்.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் அம்பை தாலுகா தமிழ்நாடு விவசாய சங்க 18வது மாநாடு நடந்தது. இதில் அகில இந்திய கம்யூ கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பென்னாகரம் இடைத்தேர்தலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்த பின்தான் தேர்தல் நடத்த வேண்டும். தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,500 ரூபாயும், கரும்புக்கு ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும. உற்பத்தி அதிகம் இருந்தபோதும் இடைத்தரகர்கள் புகுந்து விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கின்றனர். சீனி, பருப்பு, எண்ணெய் விலை அதிகளவு உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் ஆன்லைன் வியாபாரம்தான். இதனை தடை செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வை கண்டித்து மார்ச் 5ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும். மார்ச் 15ல் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வீரவநல்லூரில் 2007ல் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற இளைஞர் பெருமன்ற உறுப்பினர் சுடலைமுத்துவை கொலை செய்த கொலையாளிகள் ஜாமீனில் வந்துள்ளார்கள். இவர்கள் மீது விசாரணை நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்படுகிறது. அதோடு சுடலைமுத்துவுக்கு ஆதரவு அளித்து வந்த 3 பேர் மீது வழக்கு போட்டு பழி வாங்குகிறார்கள்.

இதுபோன்று கடந்த வருடம் ஆம்பூரில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+