அனாதையாக கிடந்த லேப்டாப், போன் - சென்னை ஏர்போர்ட்டில் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில், ஒரு லேப்டாப்பும், செல்போனும் அனாதையாக கிடந்தது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
இன்று காலை சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையப் பகுதியில் ஏராளமான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் ஒரு லேப்டாப், செல்போன், ஒயின் பாட்டில், ஒரு வாட்ச் ஆகியவை கிடந்தன. இதனால் அங்கு பீதியும், பதட்டமும் ஏற்பட்டது.
இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் அவற்றைக் கைப்பற்றிப் பரிசோதித்ததில் அவை வெடிகுண்டுகளாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் அதை யாரும் உரிமை கோரவில்லை. இந்தப் பொருட்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
புனே வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து லேப்டாப்பும், செல்போனும் கிடந்ததால் அவற்றில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று பயணிகள் பீதியடைந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications