தமிழர்களுக்கு ராஜபக்சே அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு மூலம் அதிகாரப் பகிர்வை இலங்கை அரசு வழங்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
மேலும், சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் அரசியல் நடைமுறைகளில் சமத்துவம் பெற வேண்டும். இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்க அதிபர் ராஜபக்சே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.
இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தை அதிபர் ராஜபக்சே முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமத்துவம் பெற வழி பிறக்கும்.
இலங்கைக்கு தோழமையுடன் கூடிய உதவிகளை எப்போதும் இந்தியா செய்யும் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications