புனே சென்றால் கூடுதல் கவனம் - யு.எஸ், இங்கிலாந்து, ஆஸி. பயணிகளுக்கு அரசுகள் எச்சரிக்கை
டெல்லி: புனே சென்றால் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தங்களது நாட்டவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
புனே குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பயண எச்சரிக்கையை அவை பிறப்பித்துள்ளன.
மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், அமைதியான முறையில், நடமாடுமாறும் அவை தங்களது நாட்டவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க அரசு விடுத்துள்ள பயண எச்சரிக்கை செய்தியில், இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடருவதால் அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புனேவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மூலம், அமெரிக்க மக்கள் அல்லது மேற்கத்திய நாட்டவர்களை தொடர்ந்து தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது தெரிய வருகிறது. எனவே இந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications