தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளையன் டெல்லியில் கைது
டெல்லி: காரில் செல்பவர்களிடம் நூதன முறையில் கொள்ளை அடித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளையன் டெல்லியில் கைது செய்யப்பட்டான்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். காரில் செல்பவர்களை மட்டும் பிரத்தியேகமாக குறிவைத்து நூதன முறையில் கொள்ளை அடித்து வந்த இவனை போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.
வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு செல்பவர்கள், நகைகளை எடுத்துச் செல்லும் வியாபாரிகள் போன்றோரை கண்காணிப்பதே இவனுக்கு வேலையாக இருந்தது.
இதுபோன்ற வாகனங்கள் சிக்னல்களில் நிற்கும் சமயத்தில் யாருக்கும் தெரியாமல் லாவகமாக டயரை பஞ்சர் ஆக்கிவிடுவான்.
பின்னர், வண்டியை ஓட்டுபவர்கள் கதவைத் திறந்து டயரை நோட்டம் விட வரும் சமயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நகை அல்லது பணத்தை அபேஸ் செய்துகொண்டு தப்பிவிடுவான்.
இதை மிக துல்லியமாக திட்டமிட்டு, ஒவ்வொரு வேலைக்கும் ஆட்களை தனித்தனியே நியமித்து கொள்ளை அடித்து வந்தான் நாகராஜ்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்த நகை வியாபாரி அம்ரிஷ் கோத்தாரியிடம் இதுபோல ரூ.80 லட்சம் மதிப்பிலான நகைகளை இவன் கொள்ளையடித்திருந்தான்.
இதற்காக டெல்லி போலீசாரும் இவனை தேடி வந்தனர். இந்நிலையில் டெல்லி, மதன்கிரி பகுதியில் நேற்று முன்தினம் இந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications