அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்
காஞ்சிபுரம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார் தேவநாதன். தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவரை காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் சுதா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது தேவநாதனின் காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது தேவநாதனின் சார்பில் ஆஜரான வக்கீல், தேவநாதன் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் தேவநாதனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications