உணவு பொருட்களின் விலை ஏப்ரல் முதல் குறையும்-பவார்!

ரபி பருவ அறுவடைக்காலம் என்பதால், வரும் ஏப்ரல் முதல் ஏராளமான விளைபொருட்கள் சந்தைக்கு வரும் என்றும் அப்போது தானாகவே விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சரத் பவார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், "விளைச்சல் குறைவாக இருப்பதால்தான் விலை உயர்வு இந்த அளவு உள்ளது. உணவுப் பணவீக்கமும் 20 சதவிகிதம் வரை போய்விட்டது. ஆனால் இதெல்லாம் ஏப்ரல் மாதத்திலிருந்து குறையத் துவங்கும் என நம்பலாம். மார்ச் மாத இறுதியிலிருந்தே உணவுப் பொருள்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.
அரசி, சர்க்கரை விலை விரைவில் குறையும்..." என்றார்.
நாட்டில் சர்க்கரை விலை இந்த அளவு உயர்ந்திருக்கும் போது ஐரோப்பிய யூனியனுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வது ஏன்? என்று கேட்டதற்கு, "அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது..." என்றார்.












Click it and Unblock the Notifications