தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவுக்கு இடைப்பட்ட கடல்பகுதியில் இரண்டு படகுகளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை நோக்கி சுமார் 10க்கும் மேற்பட்ட முறை சுட்டுள்ளனர். இதில் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனினும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கத் தலைவர் பில்லாரியன்ஸ் இத்தகவலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications