பள்ளிப்பட்டு அருகே மலையில் லாரி கவிழ்ந்து 10 பேர் பலி
திருத்தணி: மலைச் சரிவில் லாரி கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெடியங்காடு புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் லாரி ஒன்றில் நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திருப்பதியில் இன்று காலை திருமணம் முடிந்ததும் அதே லாரியில் அவர்கள் 7 மணிக்கு சொந்த ஊருக்கு திரும்பினர்.
பள்ளிப்பட்டு நோக்கி வந்த போது ஆந்திராவில் கார்வேட் நகரப் பகுதியின் சின்ன கால்வாய் மலைச் சரிவில் அந்த லாரி சாலையோரமாக தலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் பயணம் செய்த தேவி (19), வெங்கடேசன் (50), சரவணன் (30), செல்வராஜ் (57), தாமு (50), வாசு (36), வேலு (28), பழனி (56) உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆந்திராவின் புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications