டாக்டர் கடத்தல்: தமுமுகவினர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் டாக்டரை கடத்தியதாக தமுமுக தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி ஆர்த்திநகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார் பிஸ்வாஸ். நாட்டு வைத்தியரான இவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். சஞ்சய் குமாரிடம் ஏராளமான பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு கும்பல் மருத்துவமனைக்குள் அதிரடியாக புகுந்து அவரை கடத்தி சென்றது. இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது.

தென்காசி போலீசார் விசாரணை நடத்தினர். சஞ்சய் குமார் செங்கோட்டையில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து செங்கோட்டை வந்த போலீசார் அவரை மீட்டனர்.

இதுதொடர்பாக செங்கோட்டை தமுமுக தலைவர் முக்த்பிலா ஷா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+