பாகிஸ்தானில் பனிச்சரிவு: கிராமமே புதைந்து 38 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே மண்ணில் புதைந்து, 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள காண்டியா பள்ளத்தாக்கு பனி பிரதேசம் நிறைந்த பகுதி. அங்கு பனி மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பஹாரோ கிராமம்.

அங்கு நேற்று திடீரென பனிப்பாறைகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த கிராமமே பூமிக்குள் புதைந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

சாலைகளும் சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 60 பேர் உயிர் இழந்துள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பனிப்பாறை மற்றும் மண் சரிவுக்குள் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகள் தாமதமாகவே நடக்கின்றன.

பெஷாவரில் இருந்து உணவு பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டரால் அங்கு தரை இறங்க முடியவில்லை. எனவே நிவாரணப் பணிகளும் மந்த கதியிலேயே நடந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+