எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குளித்த டிடிஆர்கள்!
சென்னை: ஓய்வறைகளில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி, ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் பிளாட்பாரத்தில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களாக பணியாற்றுபவர்களுக்கு தங்கி ஓய்வெடுக்க அனைத்து வசதிகளும் செய்து தரக்கோரி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச்செயலாளர் கண்ணையா தலைமை தாங்கினார்.
இதில் 300க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்கள் சிலர் திடீரென 4 பிளாட்பாரத்தில் குளிக்க தொடங்கினர்.
பிளாட்பாரத்தின் ஓரத்தில் தட்டிகளால் ஆன கழிப்பிடத்தையும் ஏற்படுத்தி தாங்கள் படும் துன்பங்களை தெளிவுபடுத்தும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கான ஓய்வறையை 2 மாதத்துக்குள் போதிய வசதிகளை செய்து கொடுக்கத் தவறினால் அனைத்து டிடிஆர்களும் பிளாட்பாரத்தையே கழிப்பிடமாகவும், குளியலறையாகவும் பயன்படுத்துவோம் என டிடிஆர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications
