ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டும் குமரன் பத்மநாதன்!

Subscribe to Oneindia Tamil

Kumaran Padmanathan
கொழும்பு: விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் இலங்கையிலிருந்தபடி வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது புலிகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழர் அமைப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானதும், இனி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நான்தான் தலைவர் என்று அறிவித்தவர் கேபி. இதையடுத்து இலங்கை உளவுப்படை இவரை கோலாலம்பூரில் வைத்து கைது செய்து கொழும்புக்கு அழைத்து சென்றது.

அவர் என்ன ஆனார் என்பது சில மாதங்கள் வரை மர்மமாக இருந்தது. ஆனால் அவர் ராஜபக்சேவுக்கு தீவிர ஆதரவாளராக மாறி இருப்பது சமீப காலமாக நடக்கும் சில நிகழ்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியிலும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் ராஜபக்சே தீவிரமாக உள்ளார். தமிழர்களின் ஓட்டுக்களை சிதறடித்தால் தனக்கு எளிதாக வெற்றி கிடைத்து விடும் என்பதி ராஜபக்சே கணக்கு.

இதற்கு அவர் பத்மநாதனை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பத்மநாதன் உலகம் முழுவதும் உள்ள தன் ஆதரவாளர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் ராஜபக்சேக்கு ஆதரவாக செயல்படுமாறு கோருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதோடு வடகிழக்கு மாகாணத்தில் சிலரை சுயேட்சையாக போட்டியிடும்படியும் அதற்கு தேவையான நிதி உதவிகளை தான் செய்வதாகவும் கூறி வருகிறார் என்கிறார்கள்.

தமிழர்கள் ஓட்டுக்களை இப்படி சிதறடிப்பதால் விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பை அரசியல்ரீதியாக வீழ்த்த முடியும் என்று ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

புலிகளின் ஜென்ம எதிரியிடம் பத்மநாதன் விலை போய்விட்டாரா அல்லது சிறையில் அரசின் கடும் நெருக்கடியால் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் கேபியின் இந்த நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் பரப்பியுள்ளது.

தேர்தலில் பாசில் போட்டி:

இந் நிலையில் மகிந்தா ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ச, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மேற்கு மகாணத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் பாசில், அதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

பாசில் ராஜபட்ச, சமீபத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தவர். வடக்குப் பகுதியில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் அதிபர் ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+