நெல்லையில் கள்ளக் காதல்: குழந்தையுடன் தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கணவனின் கள்ளக்காதலால் மனமுடைந்த மனைவி குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து இறந்தார்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் போலீசிடம் சரணடைந்துள்ளார்.

பாளை பொட்டல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் இன்பராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள்செலவி பிரேமா என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஓன்றரை வயதில் எபநேசர்ராஜ் என்ற குழந்தை உள்ளது. இன்பராஜுக்கும் கேடிசி நகரை சேர்ந்த முருகம்மாள் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த பிரேமா கணவரை கண்டிததார். இருப்பினும் அவர் முருகம்மாளுடனான தொடர்பை நிறுத்தவில்லை. சில தினங்களுக்கு முன் முருகம்மாளின் தங்கைக்கு திருமணம் நடந்த்து.

இந்த திருமணத்திற்கு இன்பராஜ் செல்லகூடாது என பிரேமா கூறினார். ஆனால் இன்பராஜ் முருகம்மாளின் தங்கை திருமணத்திற்கு சென்றார்.

இதனால் மனமுடைந்த பிரேமா நேற்று முன்தினம் தனது மகன் எபநேசரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில் பிரேமாவின் சாவுக்கு இன்பராஜ் மற்றும் அவரது கள்ளக்காதலி முருகம்மாள் ஆகியோர் காரணம் என தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்பராஜ் நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

முருகம்மாளை தேடி வருகின்றனர். இன்பராஜின் தாய், தந்தையிடமும் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+