மூடுவிழா காணும் ரயில்நிலைய 'சைபர் கஃபே'க்கள்!
டெல்லி: போதிய வருவாய் இல்லாத காரணத்தால் ரயில் நிலையங்களில் திறக்கப்பட்ட சைபர் கஃபேக்கள் மூடப்படும் சூழ்நிலையில் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வசதியாக சுமார் 82 இடங்களில் இண்டர்நெட் மையங்களை தனியார் ஒத்துழைப்புடன் அமைக்க ரயில்வே திட்டமிட்டது.
இதன்படி, சென்னை சென்ட்ரல், டெல்லி, மும்பை, ஹவுரா, ஹைதராபாத், பெங்களூர், லக்னோ உட்பட 24 ரயில் நிலையங்களில் சைபர் கஃபே மையங்கள் கடந்த 2007ம் ஆண்டில் துவக்கப்பட்டன.
ஆனால் இந்த ரயில்வே மையங்களின் மூலம் போதிய வருவாய் கிடைக்கவில்லை என இம்மையங்களின் முகவர்கள் புகார் கூறி வந்தனர். பல இடங்களில் இந்த இண்டர்நெட் மையங்கள் மூடப்பட்டும் விட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட ஒப்பந்தகாலம் முடிவதற்கு முன்னதாக மூன்று ஆண்டுகளிலேயே ரயில்நிலைய சைபர் கஃபேக்கள் மூடுவிழா காணத் தொடங்கி விட்டதாக ரயில்டெல் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications