பகுஜன் எம்எல்ஏ கொலை மிரட்டல்: முதல்வருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய உ.பி. என்ஜீனியர்

உத்தரப்பிரதேச மாநில நீர் பாசனத் துறை செயற் பொறியாளர் சிவதாஸ், முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதிக்கு நேற்று தனது ராஜினாமா கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், இடாவா மாவட்டத்தில் உள்ள லக்னா சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவான பீமாராவ் அம்பேத்கர் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு இதேபோன்ற விவகாரத்துக்காக ஆரயா மாவட்டத்தைச் சேர்ந்த குப்தா என்ற பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சேகர் திவாரி என்ற பகுஜன் சமாஜ் எம்எல்ஏவால் அடித்துக் கொள்ளப்பட்டார்.
இதே போன்ற நிலைமை தனக்கும் வரக்கூடாது என்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்வதாக பொறியாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மாயாவதி டெல்லி சென்றிருப்பதால், அவர் வந்த பின்னர் தான் இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications