ஜெவுடன் வைகோ சந்திப்பு-இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை

போயஸ் கார்டனி்ல் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது பென்னாகரம் இடைத் தேர்தல், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினர்.
'ஜெ சுவர் விளம்பரம்'-அதிமுகவினர் அடிதடி!
ஜெயலலிதாவின் பிறந்த நாள் சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சேடப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜின் மகன்கள் தனராஜன், ரமேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக மாணவரணி செயலாளராக இருந்து வருபவர் தெய்வேந்திரன்.
பிப்ரவரி 24ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் விளம்பர போர்டுகள் வைத்துள்ளார்.
ஆனால், இதில் பலர் ஏராளமான இடங்களில் முறையான அனுமதி பெராமல் ஜெயலலிதாவை வாழ்த்தி சுவர் விளம்பரங்களும் செய்துள்ளனர்.
சுவர் விளம்பரங்கள் செய்வதில் தெய்வேந்திரனுக்கும் சேடப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான துரைராஜின் மகன்கள் தனராஜன், ரமேஷ் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் கவனம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் தெய்வேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ.வின் மகன்கள் தனராஜன், ரமேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் விமல், வினோத் ஆகிய 4 பேரும் சேர்ந்து தெய்வேந்திரனை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடு்த்து அவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர போலீசார் எம்.எல்.ஏவின் மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications