உரக் கொள்கை- அழகிரியுடன் இன்று பிரதமர் ஆலோசனை
டெல்லி: புதிய உர மானியக் கொள்கை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியுடன், பிரதமர் மன்மோகன் சிங் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
புதிய உர மானியக் கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் உர மானியக் கொள்கை தொடர்பாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மு.க.அழகிரியும் திமுகவின் நிலையை வலியுறுத்தி இதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். அவர் சார்பில் அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமரிடம் பேசினார். ஆனால் இறுதியில் அழகிரியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று இதுதொடர்பாக மீண்டும் ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்திற்கு வருமாறு அழகிரிக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications