ஸ்டார் ஏவியேஷனை வாங்கும் ஜிஎம்ஆர் குழுமம்?

2007ம் ஆண்டே இந்த நிறுவனம் விமானங்களை இயக்க லைசென்ஸ் பெற்றுவிட்டது. ஆனால் சேவையை இன்னும் துவக்கவில்லை.
இதற்கிடையே சன் குழுமத்தின் கலாநிதி மாறனுடன் விற்பனை குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை ஸ்டார் குழுமம் மறுத்துவிட்டது. அந்நிறுவனத்தின் சிஇஓ டிவி துரைராஜ் கூறுகையில், 'ஸ்டார் ஏவியேஷன் மாறனுடன் எந்தப் பேச்சும் நடத்தவில்லை' என்றார்.
இதற்கிடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 13 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் கலாநிதி மாறன் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்போது ஹைதராபாதைச் சேர்ந்த ஜிம்ஆர் குழுமத்துக்கு ஸ்டார் ஏவியேஷனை விற்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையம், துருக்கியின் இஸ்தான்புல் சபியா விமான நிலையம் போன்றவற்றின் பராமரிப்புப் பண்களை மேற்கொண்டுள்ளது ஜிஎம்ஆர் குழுமம். இவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருப்பதாக துரைராஜ் தெரிவித்துள்ளார்.
"ஜிஎம்ஆர் குழுமத்துடனான பேச்சுக்களில் ஈடிஏ குழுமம் இறங்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் எங்கள் நிறுவனத்தின் முதல் விமானம் பறக்கத் துவங்கும். அதற்கான அனுமதி பெற்றுள்ளோம். லைசென்ஸையும் புதுப்பித்துள்ளோம். உள்ளூர் வழித்தடங்களில் சிறப்பான சேவையை ஸ்டார் ஏவியேஷன் வழங்கும்" என்றார்.
இதுகுறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிப்பதற்கில்லை என்று ஜிஎம்ஆர் குழுமம் கூறியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications