நள்ளிரவில் நடந்த போலீஸ் விசாரணையின்போது சாருலதாவுக்கு மயக்கம்
சென்னை: போலீஸ் அதிகாரியாக நடித்து சிக்கியுள்ள இளம் பெண் சாருலதாவிடம் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவர் மயக்கமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாருலதா, போலீஸ் அதிகாரி போல வேடமிட்டு நடித்து போலீஸாரையும், பல இளைஞர்களையும் ஏமாற்றி கைதானார்.
பல லட்சம் அளவுக்கு பண மோசடியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்துள்ளது காவல்துறை.
இன்று மாலை 3 மணியுடன் சாருலதாவின் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சாருலதாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாருலதாவிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சாருலதாவிடம் பெண் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சாருலதா மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு சளிப் பிரச்சினை இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
2 நாள் விசாரணையின்போது தனது மோசடிகள் குறித்து சாருலதா பல்வேறு தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தான் மோசடி செய்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் அவர் கொடுத்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீஸ் சீருடையை தயாரிப்பது உள்ளிட்டவை குறித்த உதவிகளை 3 பெண் போலீஸார் கொடுத்து உதவியதாகவும் சாருலதா கூறியதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications