வளர்ச்சி அதிகரிக்கும்.... விலைவாசியும்தான் - பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

2010-11ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக கருதப்படும் இந்தியாவில் வரும் 2014ம் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிச்சயமாக இரட்டை இலக்கைத் தொட்டுவிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டு 2010-11ல் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9 சதவீதத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த சில மாதங்களுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உணவுப் பொருள் பணவீக்கம் 18 சதவீதத்தை தொட்டிருப்பதற்கு காரணம், உணவு நிர்வாக கொள்கைகளே காரணம் என அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காணப்படும் வறுமை மற்றும் ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் முரண்பாடானது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவு மானியங்கள் பொது வினியோக திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு பதிலாக, நேரடியாக வீடுகளுக்கு போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஏழை மக்களுக்கு உணவு கூப்பன்களை வழங்கி, அதன் மூலம் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் வெளிநாட்டு மூலதனத்தை ஊக்குவிக்கும் தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications