டெல்லியில் ஸ்டாலின்- புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்தார்

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்ட போது நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில்,
'தமிழக சட்டசபைக்கு புதிய வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதில், பங்கேற்க முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, சபாநாயகர், துணை சபாநாயகர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்பட தலைவர்களை சந்தித்து தமிழக சட்டசபை வளாக திறப்பு விழா அழைப்பிழை வழங்க உள்ளேன்' என்று கூறினார்.
இன்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாலர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, வீரப்ப மொய்லி ஆகியோரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலினுடன் அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் சென்றிருந்தார்.
பிரகாஷ் காரத்துடன் சந்திப்பு...
தனது பயணத்தின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தையும் சந்தித்தார் ஸ்டாலின். அவருடன் டபிள்யூ. ஆர்.வரதராஜன் மரணம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. சந்திப்பின்போது அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.
இதற்கிடையே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், வரும் 13ம் தேதி தமிழக சட்டசபை வளாக புதிய கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைப்பார் என அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications