பட்ஜெட் தாக்கலானவுடன் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

Subscribe to Oneindia Tamil

Petrol
டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி உயர்த்தப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் கூறிய சில மணி நேரத்துக்குள்ளாக நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகளில் விலை உயர்த்தப்பட்டுவிட்டன.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி 2.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், கலால் வரி ஒரு ரூபாய் அதிகரிப்படுவதாகவும் இன்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்த வரி மாற்றங்களின் மூலம் பெட்ரோல் விலை ரூ.2.67ம், டீசல் விலை ரூ.2.58ம் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு இன்று இரவு முதல் தான் அமலுக்கு வர வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல பெட்ரோல் பங்க்குகளில் விலை கூட்டிவிட்டனர்.

பெட்ரோல் லிட்டர் ரூ.2.67ம், டீசல் விலை ரூ.2.58ம் அதிகரித்துள்ளது.

சில பங்குகளில் நாளை முதல் புதிய விலையில் விற்பனை செய்வதற்காக, 'ஸ்டாக் இல்லை' என்ற அறிவிப்பை தொங்கவிடுவதும் பல இடங்களில் நடக்கிறது.

இதற்கிடையே, விலையை உயர்த்தாத பங்க்குகளில் பெட்ரோல், டீசலை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டுள்ளதால் பல பங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+