பொன்சேகா மீது சிவில் கோர்ட்டில் புதிய வழக்குகளைப் போடும் இலங்கை அரசு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: சரத் பொன்சேகா மீது சிவில் கோர்ட்டில் புதிய வழக்குகள் தொடரப்படும் என இலங்கை அமைச்சர் பெரீஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரீஸ் கூறுகையில், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பல மோசடி மற்றும் வஞ்சக செயல்களில் ஈடுபட்டார். அரசுக்கு எதிராக திட்டமிட்டார். மேலும் ராணுவத்தில் இருந்து விலகியவர்களின் உதவியுடன் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டார்.
அவர் மீதான இந்த புதிய குற்றச்சாட்டுகள் இலங்கை சிவில் கோர்ட்டில் இன்னும் 2 வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றார்.
முன்னதாக ராணுவ கோர்ட்டிலேயே பொன்சேகாவை விசாரிப்போம் என இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் சர்வதேச அளவில் அதற்கு நெருக்கடி அதிகரிக்கவே தற்போது சிவில் கோர்ட்டுக்கு இறங்கி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications