பெங்களூர் தீ விபத்து - கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் கடந்த செவ்வாய் கிழமை ஒன்பது பேரை பலிவாங்கிய தீவிபத்து சம்பவம் தொடர்பாக கார்ல்டன் டவர் அடுக்குமாடி கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் இந்திரா நகர், பழைய விமான நிலைய சாலையில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் தீ விபத்தை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் முறைப்பட செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
சாப்ட்வேர் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக அலுவலகங்கள் இயங்கி வந்த இக்கட்டிடத்தில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகள் செய்யப்படாமல் இருந்தது மிகப்பெரிய குற்றம் என்ற அடிப்படையில் போலீசார் கட்டிட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீக்காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை விட, தப்பியோடுவதற்கு வழியில்லாமல் ஜன்னல்கள் வழியாக குதித்து காயமடைந்தவர்களும், இறந்தவர்களுமே அதிகம் என தெரியவந்துள்ளது.
இக்கட்டிடத்தில் உள்ள அவசர வெளியேற்றத்துக்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டும், அறையாக மாற்றப்பட்டும் உள்ளன.
தீவிபத்துக்கு மின் கசிவு அடிப்படை காரணமாக அமைந்தாலும், அதிக உயிர் பலிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதே முக்கிய காரணமாக அமைந்ததாக போலீசார் விசாரணையின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுக்குமாடி கட்டிட உரிமையாளர் ரஃபிக்கூர் ரஹ்மான், கட்டிட சங்க செயலாளர் ராமசந்திர பண்டாரி, மின்சார மேற்பார்வையாளர் கெம்பகவுடா, கட்டிட பராமரிப்பாளர் சென்னய்யா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications