பேச்சுவார்த்தை - நாகா தீவிரவாத தலைவர்கள் டெல்லி வருகை
டெல்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐஎம்) பிரிவின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.
இந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் இசாக் சிசி ஸ்வூ மற்றும் பொதுச் செயலாளர் துங்கலாங் முய்வா ஆகியோர் இதற்காக டெல்லி வந்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு இந்த இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் பின்னர் தற்போது மீண்டும் நாகாலாந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இருவரும் டெல்லி வந்துள்ளனர்.
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்காக நியமித்திருக்கும் முன்னாள் பெட்ரோலியத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாண்டேவுடன் இவர்கள் பேச்சு நடத்துவர்.
தனி நாகாலாந்து நாடு கோரி இந்த அமைப்பு போராடி வருகிறது. மாசே துங்கின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தனி நாடு அமைய வேண்டும் என்றும் கோரி தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மணிப்பூரின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், அஸ்ஸாமில் நாகா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications