தூத்துக்குடி: ரூ.5000 கோடி செலவில் 1200 மெகாவாட மின் நிலையம்
தூத்துக்குடி: கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 1200 மெகாவாட் மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் ஏஆர் புகாரி தெரிவித்தார்.
கோல் அண்ட் ஆயில் குருப்பின் துணை நிறுவனம் கோஸ்டல் எனர்ஜென். இந்நிறுவனம் தலா 600 மெகாவாட் கொண்ட இரண்டு மின் உற்பத்தி நிறுவனங்களை தூத்துக்குடியில் ரூ.5000 கோடி செலவில் அமைத்து வருகிறது.
அனல் மின் நிலையத்திற்கு தேவையான எந்திரங்களை வாங்க ஹார்பின் பவர் என்ஜினியரிங் என்ற சீனக் கம்பெனிக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. சிவில் வேலைகள் கம்மன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1200 மெகாவாட் திறனுள்ள இந்த மின்சார உற்பத்தி நிலையத்தை 4000 மெகாவாட் வரை விரிவுபடுத்த முடியும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பதற்கு ஓப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
கோஸ்டல் எனர்ஜி தொழில்துறையினர், வங்கி அதிகாரிகள் கொண்ட மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் கோல் ஆண்ட் ஆயில் குரூப் தலைவர் அகமது ஏஆர் புகாரி பேசுகையில்,
'தென்னிந்தியாவில் தொழில் மற்றும் மின்சார உற்பத்தி மையமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் நல்ல நிலம், போக்குவரத்து வசதிகள் உள்ளன.
இங்கு திறனுள்ள தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழல் உள்ளது. தமிழக அரசும் முதலீட்டாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டைகள் அருகிலேயே உள்ளன.
எனவே தூத்துக்குடியை தொழில் மற்றும் மின் உற்பத்தி மையமாக வளர்க்க கோஸ்டல் எனர்ஜி முயற்சிக்கும்.
கோஸ்டல் எனர்ஜென் 2400 மெகாவாட், இந்த் பாரத் 1200 மெகாவாட், டிஎன்ஈபி-என்எல்சி 1000, டிஎன்ஈபி-பிஎச்எல் 1600 மெகா வாட் திட்டங்கள் என மொத்தம் சுமார் 6000 மெகா வாட் மி்ன் உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடியில் அமைய உள்ளன' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications