கோவில் திருவிழால் திடீர் மோதல் - நிர்வாகிக்குக் கத்திக் குத்து
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நடந்த கோவில் திருவிழா மோதலில் கோவில் நிர்வாகி கத்தியால் குத்தப்பட்டார்.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள சின்மயாநகர் குலசேகரம் தெருவில் நீரோடை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று பவுர்ணமியையொட்டி திருவிழா நடந்தது.
கோவில் நிர்வாகிகள் லோகு, ரங்கநாதன், ஆனந்தன், நீலகண்டன் ஆகியோர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்க்கரை, சீனிவாசன், மது ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் நீலகண்டன் கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சர்க்கரை, சீனிவாசன், மது ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த சர்க்கரை, மது, சீனிவாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் கடைகளை அடித்து உடைத்து சூறையாடினர். இத்தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்து, சரவணன், அந்தோணி, ரவி, தீனா, நாகராஜன், ஐசக் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications