ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம் - தானேவில் 3 பேர் பலி
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் நேற்று இரவு நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
வட இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகைக முதல் நாள் தீவைத்து கொளுத்துவது வழக்கம். சொக்கப் பானை போல இது நடைபெறும். பேரீச்சம் பழம் உள்ளிட்ட பல பொருட்களைப் போட்டு தீயிட்டுக் கொளுத்துவார்கள்.
மும்பை அருகே தானே பகுதியிலும் நேற்று ஹோலியையொட்டி நெருப்பு மூட்டிக் கொளுத்தினர். அப்போது விரார் பகுதியில் நடந்த சம்பவத்தின்போது தீயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
மின்சார கம்பத்திற்கு அருகே அவர்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வயர் அறுந்து அவர்கள் மீது விழுந்தது.
உயிரிழந்த மூன்று பேரும் விரார் பகுதியைச் சேர்நந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம்...
இதற்கிடையே, நாடு முழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணப் பொடிகளையும், வண்ண நீரையும் முகத்தில் பூசியும், பீய்ச்சியடித்தும் ஹோலியை கொண்டாடுகின்றனர் வட இந்தியர்கள்.
சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் செளகார்ப்பேட்டை, பாரிமுனை, மின்ட், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.












Click it and Unblock the Notifications