மாயமான விடைத்தாள்கள் - வலை வீசி தேடி வரும் சென்னை பல்கலைக்கழகம்
சென்னை: சென்னை பல்கலைக்கழம் எந்த அளவுக்கு ஜாக்கிரதையுடன் செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது.
15 மாணவர்களின் விடைத்தாள்களை காணவில்லை. அதை கடந்த 8 மாதமாக வலை வீசி தேடி வருகிறார்களாம். துணைவேந்தர் முன்பு இது அம்பலமாகி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த சம்பவம்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஜி.திருவாசகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். அன்று முதல் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் குறைகளை மாதத்தின் முதல் திங்கட்கிழமை கேட்டு வருகிறார். மாணவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து முடிந்தவரை உடனுக்கு உடன் தீர்த்து வருகிறார்.
நேற்று மாணவர்களின் குறையை கேட்க சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இயக்குனர் மோகன்ராம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாணவராக அழைக்கப்பட்டனர்.
துணைவேந்தர் திருவாசகம் குறைகளை விவரமாக கேட்டார். சில மாணவர்கள் தங்களுக்கு சான்றிதழ் வரவில்லை என்றும் சில மாணவர்கள் தேர்வு எழுதியும் எங்களுக்கு ஆப்சென்ட் என்று சான்றிதழில் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் அளித்த புகார்களுக்கு உடனுக்கு உடன் அதிகாரிகளை அழைத்து பதில் அளித்தார். அதனால் பல மாணவர்கள் திருப்தியுடன் சென்றனர்.
சில மாணவர்கள் கூறுகையில் பல முறை அலைந்தும் சம்பந்தபட்ட செக்ஷன்களில் சரியான பதில் வருவதில்லை என்றும் அவ்வாறு பதில் அளித்தாலும் 10 நாட்கள் கழித்து வரச் சொல்வார்கள். அவர்கள் சொன்ன தேதியில் சென்றால் மீண்டும் 10 நாள் கழித்து வரச் சொல்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதை விட மோசமான புகார் துணைவேந்தர் முன்பு வைக்கப்பட்டது. சோழிங்கரை சேர்ந்த ஒரு மாணவி வந்தார். அவர் பி.லிட் தமிழ் இலக்கியம் படிப்பதாகவும் கடந்த ஜுன் மாதம் தேர்வு எழுதியதற்கு இதுவரை ஒரு பாடத்திற்கு தேர்வு முடிவு வரவில்லை என்றும் 5 முறை வந்து சென்றதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து உடனே அருகில் உள்ள அதிகாரிகளிடம் துணைவேந்தர் விசாரித்தார். அப்போது அந்த அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த மாணவி மட்டுமல்லாமல் மொத்தம் 15 பேரின் விடைத்தாள் கட்டைக் காணவில்லை. அதை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு துணைவேந்தர் அதிர்ச்சி அடைந்தார்.
இவ்வளவு அஜாக்கிரதையாக சொல்கிறீர்களே என்று கடிந்து கொண்ட அவர் உடனடியாக அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள் என்று உத்தரவிட்டார்.
பின்னர் துணைவேந்தர் பேசுகையில், -
மாணவ-மாணவிகளுக்கு சிரமம் கொடுக்காதீர்கள். அவர்களை அலைக்கழிக்காதீர்கள். அவர்கள் ஒவ்வொரு செக்ஷனுக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. தினமும் இதற்காக மாலை 2 மணி நேரம் ஒதுக்கி மாணவர்களின் குறைகளை ஒரு கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.
ஒரு மாணவர் பி.காம். எடுத்து 2 வருடம் படித்துவிட்டு 3-வது வருடம் பி.எஸ்சி.கணிதம் எடுத்து படிக்கும் முறை இங்கு அமலில் உள்ளது. அதாவது அவர் மீண்டும் முதல் வருடத்தில் இருந்து கணிதம் எடுத்து படிக்கலாம். ஆனால் அவரை 3-வது ஆண்டு பி.எஸ்சி. கணித மாணவர் என்பதை எப்படி ஏற்க முடியும். இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தொலை தூரக்கல்வியில் செமஸ்டர் அல்லாத முறையில் கேட்கப்படும் கேள்விகள் போல ஏ பிரிவு பி பிரிவு என்று மட்டுமே இருக்கவேண்டும்.
அதுபோல விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வசதி உண்டு. ஆட்கள் பற்றாக்குறையும் உடனடியாக போக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் 136 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் திருவாசகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications