ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது-மமதா
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் காரணமாக எங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பிரித்து விடலாம் என யாரும் நினைத்தால் அது தவறு என்று கூறியுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் குரல் கொடுத்தது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மம்தா கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் இடையே பிளவு என்ற பிரசாரம் எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் திங்கள்கிழமை வங்காள தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின்போது மமதா கூறுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணமூல் தொடர்ந்து நீடிக்கும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இரு கட்சிகளையும் பிளவு படுத்த நினைத்து அது தொடர்பான வதந்திகளைப் பரப்புவோரின் எண்ணம் ஈடேறாது. இத்தகையோர் இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபடக்கூடாது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார் மமதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications