ஜெ சொத்து வழக்கு-18ம் தேதி சாட்சிகள் மறுவிசாரணை
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 42 சாட்சிகளிடம் வரும் 18ம் தேதி மறுவிசாரணை நடத்த பொங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகள் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தன.
இதில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மட்டும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 45 சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜபான வக்கீல் ஆச்சார்யா மனுதாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை கடந்த 25ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்தார். 45 சாட்சிகளை மறு விசாரணை செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து வழக்கை வருகிற 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது 42 சாட்சிகளை 18 முதல் 26ம் தேதிக்குள் மறு விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கூறினர்.
ஏற்கனவே தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications