பெட்ரோல் விலை உயர்வு-நாடாளுமன்றத்தில் கடும் அமளி
டெல்லி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று எதி்ர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்- டீசல் மீது வரி உயர்த்தப்பட்டதையடுத்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த திமுக, திரிணமுல் காங்கிரஸ் ஆகியவையும் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் பட்ஜெட் தாக்கலான பிறகு இன்று நாடாளுமன்றம் 4 நாள் இடைவெளிக்குப் பிறகு கூடியது. காலை மக்களவை கூடியதும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று ஒரே குரலில் பெட்ரோல்-டீசல் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் விலைவாசி உயர்வையும் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சபாநாயகரின் இருக்கைக்கு முன் கூடி அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பத்துக்கு இடையே அவையை சபாநாயகர் மீராகுமார் பிற்பகல் வரை ஒத்தி வைத்தார்.
அதே போல மாநிலங்களவையிலும் இந்தக் கட்சிகளின் எம்பிக்கள் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவையை துணை ஜனாதிபதியும் மக்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.
பின்னர் பகல் 2 மணிக்கு மீண்டும் அவைகள் கூடிய பின் விவாதங்கள் தொடங்கின.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சு-பிரணாப்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந் நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து
காங்கிரஸ் மேலிடம் நேற்று நடத்திய உயர் மட்டக் கூட்டத்தில் டீசல் விலையை மட்டும் கொஞ்சம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாளை இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்டியுள்ளார். அவர்களது கருத்துக்களைக் கேட்ட பி்ன் இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications