ஆட்சிக்காலமே முடியப் போகிறது, இனி பங்கு கேட்டு புண்ணியம் இல்லை- எஸ்.ஆர்.பி.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று நாம் கேட்பது எந்தப் பலனையும் தராது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ஜி.கே.வாசனின் தீவிரவாத ஆதரவாளர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த கட்சியினர் பாடுபட வேண்டும். மேலும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனி ஆட்சியில் பங்கு கேட்டு பயனில்லை.
"நாம் தமிழர்' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்களை விரட்ட வேண்டும் என்றெல்லாம் பேசிவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.
திமுக பொதுக்குழுவில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியதில் எந்தத் தவறும் இல்லை.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஐவர் குழுவில் இடம் பெறாததால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் எஸ்.ஆர்.பி.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications