திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் 130 எருமைகள் பலி!
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் மாவட்டம், குளத்தூர் அருகே பாறைப்பட்டியில் ஸ்ரீ மண்டுகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவில், வழக்கமான நிகழ்ச்சிகளுடன் எருமைகள் பலியிடும் நிகழச்சி நடைபெறும்.
அக்கம் பக்கம் கிராமத்தில் உள்ளவர்களும், இந்த கிராமத்தில் வசிப்பவர்களும், நேர்த்கிக் கடன் காரணமாக, எருமைக் கன்றுகளை இந்த கோவிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கம்.
அப்படி நேர்ந்து விடப்பட்ட எறுமைகளும், மற்ற எருமைகளையும், திருவிழாவின் போது, பலி கொடுத்து குழிக்குள் புதைத்தனர்.
போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் செய்தியாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications