டீசல் விலை உயர்வை சமாளிக்க ஆர்டினரி பஸ்களுக்குப் பதில் சொகுசு பஸ்களை அதிகரிக்க திட்டம்
சென்னை: டீசல் விலை உயர்வு சமாளிக்க, பயணிகள் டிக்கெட் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்த தமிழக அரசின் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்து விட்டு அதற்குப் பதில் கூடுதல் கட்டணத்துடன் கூடிய சொகுசு டீலக்ஸ் பஸ்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சென்னையில் மாநகர பஸ் சேவை 50 கிலோ மீட்டர் சுற்றளக்கு 638 வழித்தடங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.தினமும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 3,267 மாநகர பஸ்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 54.50 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தினசரி வருவாய் ரூ. 2.2 கோடியாக அதிகரித்துள்ளது. சாதாரண மற்றும் எல்.எஸ்.எஸ்., தொடர் (வெஸ்டிபுள்), தாழ்தள சொகுசு பஸ்கள், வால்வோ' ஏ.சி. பஸ்கள் என மாநகர பஸ்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 3,267 ஆக அதிகரித்துள்ளது.
சாதாரண பஸ்களில் ஒரு குறைந்தபட்சம் ரூ. 2 முதல் 9.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எல்.எஸ்.எஸ். எனப்படும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் பேருந்துகளில், சாதாரண பஸ் கட்டணத்தை விட 50 பைசா மட்டுமே கூடுதலாக வசூலிக்க வேண்டும். ஆனால், இப்போது முதலாவது ஸ்டேஜுக்கு ரூ. 2.50ல் இருந்து தொடங்கி கடைசி ஸ்டேஜுக்கு ரூ. 11.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எம் சேவை பேருந்துகளில் குறைந்தபட்சமே ரூ. 3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 15 வரை உள்ளது.
எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ. 3 தொடங்கி ரூ. 19 வரை வசூலிக்கப்படுகிறது.
சொகுசு பஸ்களில் குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சமாக ரூ. 33ம் வசூலிக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 10 ரூபாய் தொடங்கி 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரையிலான ஏசி பஸ்சுக்குக் கட்டணம் ரூ. 75 ஆகும்.
இதுதவிர இரவு நேர பேருந்துகளில், சாதாரண பேருந்துகளின் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் பயணிகள் கட்டணம் அதிகரிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதேசமயம், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், சாதாரண பஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு, எம் மற்றும் எல்.எஸ்.எஸ். சேவை பஸ்களை படிப்படியாக சொகுசு பஸ்களாக மாற்றி, அவற்றின் எண்ணிக்கையை 80 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications