ரஷ்யாவிடமிருந்து மேலும் பல போர் விமானங்களை வாங்கும் இந்தியா -4 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க் கப்பலை இந்தியாவுக்கு அளிக்கும் இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது. இந்த பழைய கப்பலை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் இந்தியா கூடுதலாக 2.35 பில்லியன் டாலரை ரஷ்யாவிடம் வழங்கும்.
மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடின் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பின் பேரில் புடின் இந்தியா வருகிறார்.
அட்மிரல் கோர்ஷ்கோவை வாங்கும் இந்தியா அந்த போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயர் சூட்டவுள்ளது. 2013ம் ஆண்டு இந்தியாவிடம் இந்த கப்பல் வந்து சேரும்.
கடந்த 2004ம் ஆண்டு 16 மிக்-29கே ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியது. தற்போது கூடுதலாக 29 விமானங்களை வாங்கவுள்ளது.
இந்த போர் விமானம் சமீபத்தில்தான் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக 40 சுகோய்-30 போர் விமானங்களையும் இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications