பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம்- டாக்டர் ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா 8-ந் தேதி நாளை (திங்கட்கிழமை) பழைய வடிவத்திலேயே நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த மசோதாவை பழைய வடிவத்திலேயே நிறைவேற்றுவதற்கு கடந்த 13 ஆண்டுகளாக இருந்த தடைகளும், அந்த தடைகளை அகற்றி மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றுவதற்கு தெரிவிக்கப்பட்டு வந்த ஆலோசனைகளும் ஏற்கப்படாமல் மசோதாவை நிறைவேற்ற முற்படுவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனை வரவேற்கிறோம்.
ஆனால் நாட்டில் 80 விழுக்காடு அளவிற்கு உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட பெண்களை அதிகார பங்களிப்பில் புறக்கணித்து விட்டு சமுதாயத்தில் மிகச் சிறுபான்மையாக உள்ள ஆதிக்க சக்திகளுக்கு அதிகார பங்களிக்கும் முயற்சி வேதனை தருகிறது.
பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகார பங்களிப்பை மறுப்பது என்பது அந்த பெரும்பான்மை சமுதாயத்தையே புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகும்.
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டபோது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதை ஏற்காமல் மகளிர் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் கருத்து இதுவாகத்தான் இருக்கும். அதனால்தான் மேல்தட்டு மக்களைப் பற்றியே கவலைப்படும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியை பின்பற்றி தங்களது உறுப்பினர்களுக்கு கொறடா கட்டளை பிறப்பித்திருக்கின்றது.
கொறடா கட்டளை எதுவும் இல்லாமல் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் மனசாட்சியின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அல்லது மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அனைவரது ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
ஆனால், இனி அதற்கு வழி இல்லை. எனவே சமூக நீதிக்கு தளமாக விளங்கும் தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதாடி, சமூக நீதியை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications