பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐஐடி அந்தஸ்து - சிபல்
வாரணாசி: வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐஐடி அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புக்காக வாரணாசி வந்த கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐ.ஐ.டி. அந்தஸ்து தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.
நாட்டில் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் மாணவர்களில் 12.4 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடர்கின்றனர். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித்துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்ய விதிமுறை ஒன்றை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைபாடுகள் களையப்படும்.
உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் அறிவும், திறமையும் உள்ளவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதனை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்திய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க உறுதி செய்யப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications