இந்தியத் தூதரகத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் எம்.எப்.ஹூசேன்
துபாய்: இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமான பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன்.
இந்துப் பெண் கடவுகள்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் ஹூசேன். இதையடுத்து அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ஹூசேன்.
சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமையை கைவிட தீர்மானித்தார் ஹூசேன். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டார் ஹூசேன்.
95 வயதாகும் ஹூசேன், இந்திய ஓவியப் பிரியர்களால் இந்தியாவின் பிகாசோ என அழைக்கப்பட்டவர். நேற்று டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஹூசேன், தனது பாஸ்போர்ட்டை அங்கு ஒப்படைத்தார்.
இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டப்படி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதி கிடையாது. எனவே ஹூசேன் தனது இந்தியக் குடியுரிமையை விட்டுக் கொடுத்து விட்டார். இதன் மூலம் இனி அவர் கத்தார் குடிமகனாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications