பிரதமர், சோனியா தமிழகம் வருகை - அகதிகளுக்கு கட்டுப்பாடு
தூத்துக்குடி: பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் தமிழகம் வருவதை ஒட்டி தூத்துக்குடி முகாமில் அகதிகள் மூன்று நாட்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை கட்டிட திறப்புவிழா வருகிற 13ம் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தலைவர்கள் வருகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல், சி 38 கப்பலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து கண்காணித்தப்படி உள்ளது.
கடலோர போலீஸ் படை கியூ பிரிவு போலீசாரும் படகில் சென்று நோட்டமிட்டு வருகின்றனர். இதே போல் அகதிகள் முகாம்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
அகதிகள் முகாமில் இருந்து 11,12,13 ஆகிய 3 நாட்கள வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அகதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications